ஃபயர்பாக்ஸ் 3.6 பதிப்பு இனி ஆதரிக்கப்படமாட்டாது

This article is no longer maintained, so its content might be out of date.

ஃபயர்பாக்ஸ் 3.6.28-ஆனது பழைய ஃபயர்பாக்ஸின் கடைசி பதிப்பாகும். எனவே இனி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைகளோடு இப்பதிப்பு புதுப்பிக்கப் படமாட்டாது. உங்கள் கணினியையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பாக வைக்க, முடிந்தவரையில் சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை நிறுவுமாறு பரிந்துரை செய்கிறோம். இக்கட்டுரை உங்களது பதிப்பு மேம்படுத்துதல் விருப்பங்களைப் பற்றிக் காண்கிறது.

சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பினைப் பெறுதல்

நீங்கள் விண்டோஸ் XP சர்வீஸ் பேக் 2 அல்லது 3, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 -யைக் கொண்டிருந்தால், சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பினை mozilla.org -லிருந்து சீக்கிரமாக நிறுவவும். மேலும் விவரங்களுக்கு, பார்க்க:

குறிப்பு: பழைய ஃபயர்பாக்ஸ் பதிப்புகள் பாதிப்புக்குட்படக்கூடியவை என்பதால், அவை தானாகவே ஃபயர்பாக்ஸ் 12 பதிப்பிற்கு மேம்படுத்தப்படும். உங்கள் கணினி சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பினை இயக்க வல்லது என்றால், மீண்டும் பதிப்பு புதுப்பித்தலுக்காக நீங்கள் கேட்கப்படுவீர்கள். மேலும் விவரங்களுக்கு, பார்க்க: Firefox just updated - why is it asking me to update again?

சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பு பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளதோடு, ஃபயர்பாக்ஸ் 3.6 பதிப்பில் இருந்து சற்று வேறுபட்டுத் தோற்றமளிக்கிறது. பதிப்பு மேம்படுத்தலுக்குப் பிறகு வரும் மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்ள இக்கட்டுரைகள் உதவும்:

எச்சரிக்கை: ஃபயர்பாக்ஸ் 3.6 பதிப்பை தொடர்ந்து உபயோகிப்பது ஆதரிக்கப்படாததோடு பாதுகாப்பு தொடர்பான அபாயத்தை விளைவிப்பதாகும்.

விண்டோஸ் பழைய பதிப்புகளுக்கான விருப்பத்தேர்வுகள்

விண்டோஸ் 2000, விண்டோஸ் XP -யின் அசல் பதிப்பு அல்லது விண்டோஸ் XP சர்வீஸ் பேக் 1 - இவைகளுடன் இயங்க வல்ல கடைசி பதிப்பு ஃபயர்பாக்ஸ் 12 ஆகும். இந்த விண்டோஸ் பதிப்புகளை நீங்கள் உபயோகித்தால், திருத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை அம்சங்களைப் பெற, ஃபயர்பாக்ஸ்-உடன் விண்டோஸ்-யையும் மேம்படுத்துதல் வேண்டும். உங்களால் பதிப்பினை மேம்படுத்த இயலவில்லை எனில் விவரங்களுக்கு, பார்க்க:

சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பினைப் பெறுதல்

உங்களது மேக் கணினி, இண்டெல் செயலி மற்றும் மேக் இயங்குதளம் X 10.510.6 அல்லது அதற்குமேல் கொண்டிருந்தால், சமீபத்திய ஃபயர்பாக்ஸினை mozilla.org -லிருந்து சீக்கிரமாக நிறுவவும். விவரங்களுக்கு, பார்க்க:

சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பு பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளதோடு, ஃபயர்பாக்ஸ் 3.6 பதிப்பில் இருந்து சற்று வேறுபட்டுத் தோற்றமளிக்கிறது. பதிப்பு மேம்படுத்தலுக்குப் பிறகு வரும் மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்ள இக்கட்டுரைகள் உதவும்:

எச்சரிக்கை:ஃபயர்பாக்ஸ் 3.6 பதிப்பை தொடர்ந்து உபயோகிப்பது ஆதரிக்கப்படாததோடு பாதுகாப்பு தொடர்பான அபாயத்தை விளைவிப்பதாகும்.

மேக் இயங்குதளம் X 10.4, 10.5 அல்லது பவர்பிசி செயலிகளுக்கான விருப்பத்தேர்வுகள்

மேக் இயங்குதளம் X 10.4, 10.5 அல்லது பவர்பிசி செயலிகளுடன் ஃபயர்பாக்ஸின் புதிய பதிப்புகள் இயங்காது. சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பினை இயக்குவதோடு திருத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை அம்சங்களைத் தொடர்ந்து பெறுவதற்கு, மேக் இயங்குதளத்தை மேம்படுத்துங்கள் அல்லது புதுக்கணினியைப் பெறுவதே உகந்தது. விவரங்களுக்கு, பார்க்க:

மேக் இயங்குதளம் X 10.4 அல்லது பவர்பிசி செயலிகளுக்கான விருப்பத்தேர்வுகள்

மேக் இயங்குதளம் 10.4 அல்லது பவர்பிசி செயலிகளுடன் ஃபயர்பாக்ஸின் புதிய பதிப்புகள் இயங்காது. சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பினை இயக்குவதோடு திருத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை அம்சங்களைத் தொடர்ந்து பெறுவதற்கு, மேக் இயங்குதளத்தை மேம்படுத்துங்கள் அல்லது புதுக்கணினியைப் பெறுவதே உகந்தது. விவரங்களுக்கு, பார்க்க:

ஃபயர்பாக்ஸ் 3.6.28-ஆனது பழைய ஃபயர்பாக்ஸின் கடைசி பதிப்பாகும். எனவே இனி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைகளோடு இப்பதிப்பு புதுப்பிக்கப் படமாட்டாது. உங்கள் கணினியையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பாக வைக்க, முடிந்தவரையில் சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை நிறுவுமாறு பரிந்துரை செய்கிறோம்.

சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பினைப் பெறுதல்

சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பு பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளதோடு, ஃபயர்பாக்ஸ் 3.6 பதிப்பில் இருந்து சற்று வேறுபட்டுத் தோற்றமளிக்கிறது. பதிப்பு மேம்படுத்தலுக்குப் பிறகு வரும் மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்ள இக்கட்டுரைகள் உதவும்:

எச்சரிக்கை:ஃபயர்பாக்ஸ் 3.6 பதிப்பை தொடர்ந்து உபயோகிப்பது ஆதரிக்கப்படாததோடு பாதுகாப்பு தொடர்பான அபாயத்தை விளைவிப்பதாகும்.இந்த கட்டுரையை பகிர்ந்து: http://mzl.la/MVQ0Bb

These fine people helped write this article: KUMARESAN.C.S. You can help too - find out how.