உங்கள் அடையாளத்தை பாதுகாக்க பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்குங்கள்

Revision Information
  • Revision id: 90666
  • உருவாக்கப்பட்டது:
  • படைப்பாளர்: Arun Prakash
  • கருத்து: மொழிபெயர்க்கப்பட்டது
  • Reviewed: ஆம்
  • Reviewed:
  • Reviewed by: arunprakash
  • ஒப்புதல்? ஆம்
  • Is current revision? ஆம்
  • மொழிபெயர்ப்புக்கு தயார்: இல்லை
Revision Source
Revision Content

இணையத்தில் உங்கள் அடையாளத்தை பாதுகாக்க பாதுகாப்பான கடவுச்சொல்லை தேர்ந்தேடுப்பது. இந்த கட்டுரை மற்றும் உதவி காணோளி எவ்வாறு எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய கடவுச்சொல்லை உருவாக்குவது என்பதை காட்டும்.

படி 1: ஒரு சொற்றொடரை தேர்ந்தெடுத்தல்

ஒரு பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்க ஒரு எளிமையான சொற்றொடரில் இருந்து தொடங்கலாம். உதாரணமாக, ஓக்டென் நாஸ்சின் இந்த கூற்றை பயன்படுத்தலாம்: "Happiness is having a scratch for every itch."

எல்லா வார்த்தைகளின் முதல் எழுத்தையும் எடுத்துக்கொண்டு "for" என்பதை 4 என்று மாற்றினால், நமக்கு கிடைப்பது:

Hihas4ei

படி 2: சிறப்பு வரியுருக்களை சேர்த்தல்

இது ஒப்பீட்டு அளவில் வலிமையான கடவுச்சொல்லே ஆனால் இதில் சிறப்பு வரியுருக்களை சேர்ப்பதன் மூலம் இதை மேலும் வலுவூட்டலாம்:

#Hihas4ei:

படி 3: தளத்துடன் ஒன்றிணைத்தல்

நாம் இப்போது புதிய கடவுச்சொல்லை குறிப்பிட்ட தளத்தின் நினைவிகளை முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ சேர்ப்பதன் மூலம் பல்வேறு தளங்களில் பயன்படுத்தலாம். நாம் இப்போது ஒரு தளத்தின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும் அடுத்த இரண்டு உயிரெழுத்துக்களையும் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் தற்போக்குக்காக மாற்றி மாற்றி பெரிய எழுத்துக்களையும் சிற்றெழுத்துக்களையும் சேர்க்கலாம், தளத்தின் பெயர் உயிரெழுத்தாக இருக்கும் போது நாம் பெரிய எழுத்துக்களால் தொடங்களாம். இன்னும் கொஞ்சம் குழப்புவதற்காக இதே விதியை பயன்படுத்தி இடதுபுறமும் வலதுபுறமும் நினைவிகளை சேர்க்கலாம்.

#Hihas4ei:AmZ Amazon க்கு
fCb#Hihas4ei: Facebook க்கு
#Hihas4ei:YtB YouTube க்கு
dRm#Hihas4ei: Drumbeat க்கு

முன்னொட்டு மற்றும் பின்னொட்டு ஆகியவற்றை பயன்படுத்தி ஒவ்வொரு தளத்திற்கு ஏற்றவாறு உங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைக்க இதுவும் ஒரு சாத்தியமான விதி. பின்னொட்டு எழுத்துக்களை நேர்மாறாக வரிசைபடுத்துவது, உயிரெழுத்துக்களை மட்டும் பயன்படுத்துவது, மெய்யெழுத்துக்களை மட்டும் பயன்படுத்துவது, அல்லது தளத்தை நினைத்தவுடன் மனதில் தோன்றும் சிறப்பு வரியுருக்களை சேர்ப்பது என்பதும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகளாகும்.

இந்த உத்தி ஒரு சொற்றொடரை பயன்படுத்தி உண்டாக்கிய கடவுச்சொல்லை நாம் வெவ்வேறு தளங்களில் பயன்படுத்த உதவினாலும், கூடுதல் விழுமம் கொண்ட தகவல்கள் உள்ள வங்கி கணக்கு உள்ளிடவற்றுக்கு இதை பயன்படுத்துவது சிறந்த வழிமுறையல்ல. அது போன்ற தளத்திற்கென்று பிரத்தேக சொற்றொடரால் உருவாக்கப்பட்ட கடவுச்சொல் தேவை.

நீங்களே முயன்று பாருங்களேன்!

கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்த சொற்றொடரை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அந்த சொற்றொடரை பயன்படுத்தி நீங்கள் செல்லும் வெவ்வேறு தளங்களுக்கு மாற்றியமைக்க கூடிய ஒரு வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குங்கள்.

Mozilla இந்த கையேடை ஒரு பொது சேவை நோக்கோடு வழங்குகிறது. பாதுகாப்பை பலப்படுத்தும் எந்த வழிமுறையும் 100% பாதுகாப்பானது என்று உறுதியளிக்கமுடியாது, மற்றும் இந்த வெளியீட்டில் உள்ள கடவுச்சொல் பாதுகாப்பு என்பது உத்திரவாதமோ, உறுதியளிக்கும் பொருட்டோ வெளியிடப்பட்டது அல்ல.
சில தளங்கள் சில சிறப்பு வரியுருக்கள் பயன்படுத்துதலை அனுமதிக்காது. எந்த சிறப்பு வரியுருக்களை அனுமதிக்கிறார்கள் என்று அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

The template "ShareArticle " does not exist or has no approved revision.