Firefox OS மேம்பாடுகளை எப்படி கண்டறிந்து நிறுவுவது?

This article is no longer maintained, so its content might be out of date.

Firefox OS முறைமை மற்றும் பயன்பாட்டு மேம்பாடுகளை பெறுவதந்க்கு ஆவலாக உள்ளீர்களா? உங்கள் சாதனம் தானாகவே தினமும் மேம்பாடுகளை கண்டறிந்து நிறுவிக்கொள்ளும், ஆனால் நீங்கள் தாங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம். அது இப்படித்தான்:

'குறிப்பு: உங்கள் சாதன உற்பத்தியாளர், சேவை வழங்குனருடன் இணைந்து Firefox OSக்கு மேம்பாடுகளை வழங்க கடமைப்பட்டுள்ளார்.

  1. உங்கள் சாதனத்தில் அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
  2. கீழே சென்று சாதனம் பிரிவில் சாதன தகவல் என்பதை தேர்ந்தேடுக்கவும்.
  3. சாதன தகவல் திரையில், கீழே சென்று மென்பொருள் மேம்பாடுகள் பிரிவில் சரி பார் பொத்தானை தட்டவும்.

    Check for FxOS Updates
    • மேம்பாடுகள் இல்லை என்றால், "ஏற்கனவே Firefox OSசின் சமீபத்திய பதிப்பு நிறுவப்பட்டுள்ளது" என்ற செய்தியை பார்ப்பீர்கள்.
    • மேம்பாடு கிடைத்தால், சில வினாடிகளில் உங்களுக்கு ஒரு அறிவிப்பு கிடைக்கும்.
  4. அறிவிப்பு தட்டை திரையின் மேலிருந்து கீழே இழுக்கவும்.
  5. மேம்பாட்டு அறிவிப்பை தட்டினால் மேம்பாட்டு பதிவிறக்கம் தொடங்கும்.
  6. மேம்பாடு நிறுவ தயாரானவுடன், இப்போது நிறுவு என்ற சிவப்பு பொத்தானை தட்டவும்.
    • முறைமை மேம்பாட்டை நீங்கள் நிறுவினால், உங்கள் சாதனம் மறுதொடங்கும்.

 

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More