முகப்பு பக்கம் அமைப்பது எப்படி?

Firefox Firefox இறுதியாக மேம்படுத்தப்பட்டது: 09/12/2014 80% of users voted this helpful

"முகப்பு பக்கத்தை பையர்பாக்ஸில் அமைப்பது மிகவும் எளிது".உங்களுக்கு பிரியமாக பல பக்கங்கள் உள்ளதா? கவலை வேண்டாம். பையர்பாக்ஸ் உங்களுக்கு பிடித்த வலைத்தளங்களை ஒரு குழுவாக அமைத்து , அதனை முகப்பக்கமாக அமைத்துக்கொள்ள உதவும்.இந்த கட்டுரை , உங்களுக்கு ஏற்றவாறு முகப்பு பக்கத்தை எப்படி மாற்றுவது என்பதனை சில உதாரணங்கள் மற்றும் படிப்படி வழிமுறைகள் முலமாக கூறுகிறது.

உங்களுக்கு ஒவ்வொரு முறையும் பையர்பாக்ஸின் தொடக்கத்தில் "பையர்பாக்ஸ் மேம்படுத்தப்பட்டு விட்டது" என்ற தாவலை வந்தால் , இந்த கட்டுரையை பார்க்கவும்Firefox says it's just updated every time it starts - how to fix.

ஒரு இணையதளத்தை உங்கள் முகப்பு பக்கமாக அமைக்கும் முறை

உங்களுக்கு பிடித்த ஒரு இணையதளத்தை முகப்பு பக்கமாக மாற்றும் முன்று எளிதான வழிமுறைகள்.

  1. உங்களுக்கு எந்த இணையதளம் முகப்பு பக்கமாக வேண்டுமோ , அதனை முதலில் திறக்கவும்.வெற்றுப் பக்கம் வேண்டுமெனில் ஒரு புதிய தாவலையை திறக்கவும்.
  2. இணைய முகவரிக்கு இடது பக்கம் உள்ள சின்னத்தை அமுக்கி, அதனை இழுத்து வந்து முகப்பு பொத்தானிடம் விடவும்..

    266d42376d7d58a8f40ef9dae1236252-1258698578-56-1.png
    Home page Win1

    Home page Mac1
    Home page Lin1
  3. எஸ் பொத்தானை Yes அமுக்கி , இந்த பக்கதை முகப்பு பக்கமாக அமைத்துக் கொள்ளலாம்.

இதை முயற்சி செய்க: முகப்பு பொத்தானை அமுக்கினால், உங்களுடைய புதிய முகப்பு பக்கம் தற்போதைய தாவலையில்(tab) தோன்றும். மிகவும் எளியது அல்லவா?


ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை முகப்பு பக்கமாக அமைக்கும் முறை

இந்த வழிமுறை மூலமாக ,உங்களுக்கு பிடித்த இணையதளங்களுக்கு ஒரு கிளிக் முலமாக செல்லலாம். ஒரு உதாரணமாக , நீங்கள் பையர்பாக்ஸின் முகப்பு பொத்தானை அமுக்கினால் உங்களுக்கு பிடித்தமான இணையதளங்களை ஒரே சமயத்தில் திறக்கலாம் .

  1. ஒரு புதிய சாரளத்தைத் (Window) திறந்து அதில் முதல் இணையதளத்தை திறக்கவும்.
  2. புதிய தாவலை (New Tab) பொத்தானை அமிழ்த்தி உங்களுக்கு வேண்டிய இணையதளங்களை திறக்கவும்.
  3. பையர்பாக்ஸ் சாளரத்தில் (Window) உள்ள Firefox அமிழ்த்தி அதில் options தேர்வு செய்யவும்.
  4. தேர்வு செய்க General panel (Main panel in Firefox 3.5).
  5. அடுத்து அமுக்கவும் Use Current Pages.

    266d42376d7d58a8f40ef9dae1236252-1276818432-993-1.jpg
    Home page Win2Home page Mac2Home page Lin2
  6. அடுத்து ok பொத்தானை அமுக்கவும்

இதை முயற்சி செய்க: உங்களுடைய அணைத்து தாவல்களையும் (Tabs) மூடிவிட்டு மீண்டும் முகப்பு பொத்தனை அமுக்கவும்.நீங்கள் தேர்வு செய்த பக்கங்கள் தனி தாவலைகளில் (tabs) திறக்கும்.


முன்னிருந்த முகப்பு பக்கம் திரும்ப

நீங்கள் செய்த மாற்றத்தை திரும்ப பெற பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்கவும்.

  1. பையர்பாக்ஸ் சாளரத்தில் (Window) உள்ள Firefox அமுக்கி , அதில் options தேர்வு செய்யவும்.
  2. தேர்வு செய்கGeneral குழு (Main panel in Firefox 3.5).
  3. அங்கு வரும் பெட்டியில், அமிழ்த்தவும் Restore to Default.

    266d42376d7d58a8f40ef9dae1236252-1258698578-56-4.png
    Home page Win3Home page Mac3Home page Lin3
  4. விருப்ப சாளரத்தை மூட ok அமிழ்த்தவும்

பையர்பாக்ஸ் தொடக்கத்தில் என்ன பக்கங்கள் திறக்க வேண்டும் என்பதை பதிவு செய்யும் முறை

இது ஒருஅற்புதமான வசதி , நீங்கள் இதனை முகப்பு பக்க அமைப்புடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.நாம் ஒரு ஒரு பக்கத்தில் , எங்கு விட்டு சென்றோமோ அதில் இருந்து மீண்டும் தொடரலாம்.

  1. பையர்பாக்ஸ் சாளரத்தில் (Window) உள்ள Firefox அமுக்கி , அதில் options தேர்வு செய்யவும்.
  2. தேர்வு செய்க General panel (Main panel in Firefox 3.5).
  3. அங்கு வரும் பெட்டியில், "When Firefox starts:"என்ற வரிகளுக்கு அடுத்து உள்ள கீழ்தோன்றும் மெனுவில்" what Firefox should display when it starts up" என்பதனை தேர்வு செய்யவும்.
    • Show my home page என்ற விருப்பம் முகப்பு பக்கங்களை திறக்கும்.
    • Show a blank page - என்ற விருப்பம் வெற்று பக்கத்தை திறக்கும். இது வேகமாக பையர்பாக்சை திறக்கும் வழியாகும்.
    • Show my windows and tabs from last time - என்ற விருப்பம் நீங்கள் கடைசியாக பையர்பாக்ஸில் விட்டு சென்ற பக்கங்களில் இருந்து தொடர உதவும். மேலும் விவரங்களுக்கு, பார்க்கவும் Restore previous session - Configure when Firefox shows your most recent tabs and windows.
      • பொதுவாக பையர்பாக்ஸ் ஆரம்பிக்கும்போது அனைத்து தாவலைகளையும் திறக்கும்.இதனை மாற்ற "Don't load tabs until selected." என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  4. விருப்ப சாளரத்தை மூட ok அமுக்கவும்.

இதை முயற்சி செய்க: இந்த வசதியின் முலம் உங்களுடைய விருப்பமான இணையதளங்களை எளிதில் அடையலாம்.

பையர்பாக்ஸ் தொடக்கத்தில் என்ன பக்கங்கள் திறக்க வெண்டும் என்பதை பதிவு செய்யும் முறை

இது ஒருஅற்புதமான வசதி , நீங்கள் இதனை முகப்பு பக்க அமைப்புடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.நாம் ஒரு ஒரு பக்கத்தில் , எங்கு விட்டு சென்றோமோ அதில் இருந்து மீண்டும் தொடரலாம்.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. தேர்வு செய்க General panel (Main panel in Firefox 3.5).
  3. அங்கு வரும் பெட்டியில், "When Firefox starts:"என்ற வரிகளுக்கு அடுத்து உள்ள கீழ்தோன்றும் மெனுவில்" what Firefox should display when it starts up" என்பதனை தேர்வு செய்யவும்..
    • Show my home page என்ற விருப்பம் முகப்பு பக்கங்களை திறக்கும்.
    • Show a blank page - என்ற விருப்பம் வெற்று பக்கத்தை திறக்கும். இது வேகமாக பையர்பாக்சை திறக்கும் வழியாகும்.
    • Show my windows and tabs from last time - என்ற விருப்பம் நீங்கள் கடைசியாக பையர்பாக்ஸில் விட்டு சென்ற பக்கங்களில் இருந்து தொடர உதவும். மேலும் விவரங்களுக்கு, பார்க்கவும் Restore previous session - Configure when Firefox shows your most recent tabs and windows.
      • பொதுவாக பையர்பாக்ஸ் ஆரம்பிக்கும்போது அணைத்து தாவலைகளையும் திறக்கும்.இதனை மாற்ற "Don't load tabs until selected." என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  4. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

    .

இதை முயற்சி செய்க: இந்த வசதியின் முலம் உங்களுடைய விருப்பமான இணையதளங்களை எளிதில் அடையலாம்.

அம்சங்களை ஒன்று படுத்துவோம்

பையர்பாக்ஸ் மிகவும் நெகிழ்வானது – நீங்களே உங்களுக்கு பொருத்தமானதைத் தேர்வு செய்யுங்கள். ஒரே ஒரு இணையதளத்தை உங்கள் முகப்பு பக்கமாக மாற்றுங்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை முகப்பு பக்கமாக அமையுங்கள். பையர்பாக்சை எங்கு விட்டு சென்றீர்களோ அதில் இருந்து தொடர்ந்து நேரத்தை மிச்சப்படுத்துங்கள். உங்களுக்கு எது பொருந்தும் என்பதனை பயன்படுத்திப் பாருங்கள்.


சிக்கல்கள் உள்ளதா?

எங்களிடம் விடை உள்ளது:

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More