விண்டோசில் ஃபயர்பாக்ஸை நிறுவும் முறை

(How to download and install Firefox on Windows ல் இருந்து திருப்பிவிடப்பட்டது)

விண்டோசில் ஃபயர்பாக்ஸை எப்படி நிறுவுவது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

விண்டோசிற்கு மட்டும் இந்தக் கட்டுரை பொருந்தும்.
ஃபயர்பாக்ஸை நிறுவுவதற்கு முன்னதாக:

  • உங்களது கணினி இத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதி செய்யவும்: System Requirements.
  • வரம்புள்ள விண்டோஸ் XP கணக்கைக் கொண்டு ஃபயர்பாக்ஸை நிறுவ வேண்டாம். மேலும் விவரங்களுக்கு, பார்க்க Types of user accounts at microsoft.com.
  1. ஏதாவதொரு உலாவியில் (எ.கா. மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்), Firefox download page-யைப் பார்க்கவும். இந்தப் பக்கமானது உங்களுக்குப் பொருத்தமான ஃபயர்பாக்ஸ் பதிப்பினைத் தானாகவே பரிந்துரை செய்யும்.

    FireFox Download Page - Windows
  2. ஃபயர்பாக்ஸ் நிறுவியைப் பதிவிறக்க, பச்சை நிற பதிவிறக்க இணைப்பைச் சொடுக்கவும். உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து, பதிவிறக்கம் சில மணித்துளிகளுக்கு நீடிக்கலாம். பொறுமைக்கு நன்றி...இக்காத்திருத்தல் மதிப்பானது!
  3. Run-யைச் சொடுக்கி, செயல்பாட்டினைத் துவக்கவும்.

    9adf3cab7ac5be01d856c9d1020aa0da-1263064820-505-2.jpg
  4. இதன் பிறகு, செயல் படிகளைப் பின்பற்றவும் (நிறுவும் படிநிலைகளை முடிந்தவரை சிரமமற்றதாக அமைத்துள்ளோம்).

    9adf3cab7ac5be01d856c9d1020aa0da-1263064820-505-4.jpg
    வாழ்த்துக்கள், ஃபயர்பாக்ஸை நிறுவிவிட்டீர்கள்!
  5. ஃபயர்பாக்ஸ் சின்னத்தை இரட்டை-சொடுக்கம் செய்வதன் மூலம் இனி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஆன்லைனில் வரலாம்.

    Installing Firefox - Win4

ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா?

உங்களுக்கு உதவ இக்கட்டுரைகள் இருக்கின்றன:

 

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More