சிம் PIN அமைத்தல்

This article is no longer maintained, so its content might be out of date.

சிம் PIN அமைப்பதன் மூலம் சிம் அட்டையில் பிறர் அணுகலை தடுக்கலாம். சிம் PIN இயக்கத்தில் உள்ள போது, சிம் இருக்கும் சாதனத்தின் ஒவ்வொரு துவக்கத்திலும் PIN கேட்கப்படும்.

சிம் PIN அமைத்தல்

 1. settings icon மீது தட்டி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
 2. தனியுரிமை & பாதுகாப்பு-க்கு பட்டியலை உருட்டி, சிம் பாதுகாப்பு மீது தட்டவும்.
  SIM Security List Item. sim lock
 3. சிம் PIN-ஐ இயக்க, நிலைமாற்றி மீது தட்டவும்.
  SIM PIN Switch
 4. இப்பொழுது 4-8 இலக்க PIN-ஐ உள்ளிட்டுமாறு கேட்கப்படும்.
 1. சிம் PIN அமைக்க Settings- 2.0 (small) மீது தட்டி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
 2. சிம் நிர்வாகி மீது தட்டி, பின் சிம் பாதுகாப்பு பட்டியை திறக்கவும்.
 3. எந்த சிம் அட்டைக்கு PIN அமைக்க வேண்டுமோ அதற்க்குரிய நிலைமாற்றி fos enabled மீது தட்டவும்.
 4. இப்பொழுது 4-8 இலக்க PIN-ஐ உள்ளிட்டு, முடிந்தது சொடுக்கவும்.
சிம் PIN-ஐ குறித்துவைத்துக்கொள்ளவும். PIN-ஐ மறந்தீர்களேயானல் உங்களால் அழைப்புகளையோ, செய்திகளையோ மேற்க்கொள்ள இயலாது.

சிம் PIN மாற்றுதல்

சிம் PIN-ஐ மாற்ற, அமைவுகள் பட்டிக்கு சென்று பின்வருமாறு தொடரவும்:

 1. PIN மாற்று பொத்தான் மீது சொடுக்கவும்.
  Change PIN button
 2. புதிய சிம் PIN-ஐ உள்ளிடவும்.

சிம் PIN-ஐ மாற்ற, அமைவுகள் பட்டிக்கு சென்று பின்வருமாறு தொடரவும்:

 1. PIN-ஐ மாற்று க்கு வலப்புறம் செயல்படுத்தப்பட்ட நிலையிலுள்ள பொத்தானை சொடுக்கவும்.
 2. புதிய சிம் PIN-ஐ உள்ளிடவும்.
சிம் PIN-னும் கடவுச்சொல்லும் ஒன்றல்ல. இங்கு Firefox OS சாதனத்தில் திரைப்பூட்டினை அமைத்தல் குறித்து அறியலாம்.
// These fine people helped write this article:Khaleel Jageer. You can help too - find out how.
Volunteer for Mozilla Support